முப்படை தளபதி பிபின் ராவத் உடலைப் பார்த்து கண்லங்கிய மகள்கள்!
முப்படை தளபதி பிபின் ராவத் உடலைப் பார்த்து மகள்கள் கண்கலங்கிய படி இறுதி அஞ்சலி செலுத்திய வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் குன்னூர் அருகே, ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் இராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, இவர்களின் உடல்கள் இன்று காலை உள்ளூர் நேரப்படி 10.40 மணியளவில் மருத்துவமனையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து இராணுவ அதிகாரிகள் பலரும் அஞ்சலி செலுத்திய பின்பு, உடல்கள் தனி தனி ஆம்புலன்சில் சூலூர் விமானப்படைக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.
டெல்லியில் உள்ள பாலம் விமானப்படைத் தளத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ வீரர்கள் ஆகியோரின் உடல்களும் இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டன.
பின்னர் தந்தை பிபின் ராவத், தாய் மதுலிகா ராவத் உடல்களுக்கு அவர்களது மகள்கள் கண்கலங்கிய படி அஞ்சலி செலுத்தினர். தாய் மற்றும் தந்தையின் உடலைப் பார்த்து மகள்கள் கதறி அழுத வீடியோ காட்சி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
தொடர்ந்து முப்படை தலைமை தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின், விபின் ராவத் மகள்கள் மற்றும் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினனார் என்பது குறிப்பிடத்தக்கது.