பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு…

2020 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்ற A/L மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு ஒன்றை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) வெளியிட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில் இன்றுடன் நிறைவடையும் பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால அவகாசம் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.