லொட்டரி வாங்குவதையே நிறுத்திய நபருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! அடித்த மிகப் பெரும் ஜாக்பாட்
இந்தியாவில் லொட்டரி டிக்கெட் வாங்க வேண்டாம் என்று நினைத்த நபருக்கு, 80 லட்சம் ரூபாய் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
கேரளா மாநிலம் Nileshwaram-ஐ சேர்ந்தவர் Pramod. கொத்தனராக வேலை செய்து வரும், Nileshwaram-ன் convent சந்திப்பில் லொட்டரி டிக்கெட் விற்கும் P Narayani என்பவரிடம் லொட்டரி டிக்கெட் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஆனால், கடந்த சில தினங்களாக லொட்டரி டிக்கெட் வாங்குவதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது, தேவையில்லாமல் பணம் தான் வீணாகிறது என்ற ஆதங்கத்தில் டிக்கெட் வாங்குவதையே நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல் லொட்டரி டிக்கெட் விற்று வரும் P Narayani சமீபத்தில் Pramod-ஐ தொடர்பு கொண்டு, தன்னிடம் சில லொட்டரி டிக்கெட் இருப்பதாகவும்,அதில் ஒன்றை வாங்கிக் கொள்ளும் படியும் கூறியுள்ளார்.
ஆனால், அதற்கு Pramod மறுப்பு தெரிவிக்க, அதன் பின் ஒரு வழியாக P Narayani அவரை வாங்க வைத்துவிட்டார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை நடந்த லொட்டரி குலுக்கலில் Pramod வாங்கிய லொட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசான 80 லட்சம் ரூபாய் விழுகவே, இதை அறிந்த P Narayani உடனடியாக அவரை தொடர்பு கொண்டு இது குறித்து கூறியுள்ளார்.
இதனால் அவர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். ஏனெனில், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் லொட்டரி டிக்கெட் விற்று வரும் நாராயாணி கடையில் வாங்கிய லொட்டரி டிக்கெட்டுகளில் இதுவரை பரிசு விழுந்ததே கிடையாது.
இது தான் முதல் முறை என்பதால், மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக நாராயாணி கூறியுள்ளார். இதையடுத்து தனக்கு விழுந்த லொட்டரி டிக்கெட்டான (NP643922)-ஐ Nileshwaram-ல் உள்ள அர்பன் வங்கியில் Pramod கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.