நாடாளுமன்றில் நிறைவேறிய பட்ஜட்டுக்கு சபாநாயகர் சான்றுரை!

2022 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
2022 ஜனவரி 01 ஆம் திகதி முதல் 2022 டிசம்பர் 31 வரையான நிதியாண்டுக்கான அரசின் செலவுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட இந்த ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றுரைப்படுத்தினார்.