சோளம் செய்கையில் படைப்புழுவை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு!
சோளம் செய்கையில் படைப்புழுவை முகாமைத்துவம் செய்தலும் கட்டுப்படுத்தலும் தொடர்பான ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு சில்லிக்கொடியாறு கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது காஞ்சிரங்குடா விவசாய போதனாசிரியர் என்.விவேகானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.
இதில் வலயம் மத்தி உதவி விவசாயப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதியாக பாடவிதான உத்தியோகத்தர் என்.லக்ஸ்மன் மற்றும் பன்சேனை விவதாய போசனாசிரியர் திருமதி.சு.ஞானப்பிரகாசம் மற்றும் சில்லிக்கொடியாறு கமநல அமைப்பின் உறுப்பினர்கள் சாமந்தியாறு கமநல உறுப்பினர்கள் ஒதியன்குடா கமநல உறுப்பினர்கள் உள்ளிட்ட மேலும் பல விவசாயிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது விவசாய திணைக்களத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் சோளப்படைப்புழு முகாமைத்துவம், கட்டுப்பாடுகள் தொடர்பாக வருகை தந்த விவசாயிகளுக்கு செய்கை வழிகாட்டல் விளக்கங்கள் விவசாய போதனாசிரியர்களால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.