இரண்டு வார இறக்குமதிக்கு மட்டுமே டொலர் உள்ளது
நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடியால் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதா இல்லையா என்பது குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நாளை அமைச்சரவை கூடவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது தொடர்பில் அரசாங்கத்திற்குள் இரண்டு கருத்துக்கள் காணப்படுவதுடன் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக அமையும் என சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஆனால் மற்றவர்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதே டாலர் பற்றாக்குறைக்கு தீர்வு என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
அதன்படி, இந்த அமைச்சரவையில் நீண்ட நேரம் விவாதித்து முடிவு எடுக்கப்படும்.
மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இந்த சந்திப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தற்சமயம், சுமார் 1100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே வெளிநாட்டு தேவைகளுக்காக செலவிடும் திறன் நாட்டில் உள்ளது, இது இலங்கையின் இரண்டு வார இறக்குமதி கட்டணத்தை ஈடுகட்டணத்துக்கு மட்டுமே போதுமானது.