முன்னெப்போதும் இல்லாத வகையில் இராணுவம் தயார்நிலையில் – இராணுவத் தளபதி தெரிவிப்பு
“இலங்கை இராணுவம் பல்வேறு பயிற்சித் தொகுதிகள் மற்றும் பயிற்சிகளையும் அறிமுகப்படுத்தும் அதேவேளை நடைமுறைக்கு உகந்த வகையிலான மிக உயரிய போர்த் தயார்நிலையைகளைப் பேணுகிறது. எல்.ரீ.ரீ.ஈ உடனான மூன்று தசாப்த கால மோதலின் போது பெறப்பட்ட சொந்த அனுபவங்களின் அடிப்படையில் திறனமிக்க நவீன போர் நுட்பங்களுடனான எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராகிவருகிறது.
போர் அல்லது சமாதானம் உள்ளிட்ட எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் ஒரு சிப்பாய் எப்போதும் தோற்கடிக்க முடியாத சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் நவீன எதிரிகள் வழக்கத்திற்கு மாறானவர்கள், குறிப்பாக அவர்களின் சிறிய செயற்பாடுகள், மிகப்பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடியவை.
அதேபோல் 20 ஆம் நூற்றாண்டில் நாடுகளுக்கிடையில் ஏற்படக்கூடிய மோதல்களானது அந்த நாடுகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளதை போன்றே மற்றைய நாடுகளுக்கும் சிக்கல்களை தோற்றுவிக்க கூடியதாக உள்ளது.
இராணுவ அழுத்தமானது அதிக சவால் நிலைமைகளாக காணப்படும் பொருளாதார, இராஜதந்திர மற்றும் உளவியல் நெருக்கடிகள் ஆகியவற்றுடன் பிணைந்ததாக காணப்படுகிறது. அடிப்படைவாதம் மற்றும் கருத்தியல் அடிப்படையிலான மோதல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குறிப்பாக நவீன எதிரிகளை பொறுத்தவரையில் நபர்கள் மற்றும் ஆயுதங்களை விடவும் அவர்கள் கையாளும் வழிமுறைகள் மிகவும் சிக்கலான வகையில் அமைந்துள்ளன என்று பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் 15 ஆம் இலக்க பாடநெறியை பூர்த்தி செய்து ‘பிஎஸ்சி’ பட்டம் பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இளங்கலை அதிகாரிகளுக்காக நிகழ்த்திய உரையில் சுட்டிக்காட்டினார்.
‘சமகால பாதுகாப்பு பரப்பிற்குள் ஆயுதப்படைகளின் வகிபாகம்’ என்ற தொனிப்பொருளில் உரை நிகழ்த்தியிருந்த இராணுவத் தளபதி, இன்றைய பன்முக மற்றும் சிக்கலான பாதுகாப்பு சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கு இராணுவப் படைகளை நேரடியாகப் பயன்படுத்துவதை விட முறையான, விரிவான மற்றும் பின்னிப்பிணைந்த அணுகுமுறைகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றார்.
“பாதுகாப்பு சார் சூழ்நிலைகள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது, அதனால் நேரடியான தீர்மானங்களை எடுப்பது கடினமாக அமைந்துள்ளது. எனவே, முன்னைய அனுபவத்தை வைத்து அடுத்த நெருக்கடியை நம்மால் வெல்ல முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் உங்களுக்கு கொடுக்கக்கூடிய சிறந்த உதாரணம் கொவிட் 19. தொற்றுநோய்; ஒரு சிறிய வைரஸ் அனைத்து வழக்கமான பாதுகாப்பு பரிமாணங்களையும் மிஞ்சும் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாம் எப்போதாவது நினைத்திருக்கிறோமா? ”என்று அவர் வினவினார்.
இலங்கையின் முப்படையினருக்காக சர்வதேச தரத்திலான கற்பித்தல்களை வழங்கும் களமான சபுகஸ்கந்தவில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக வருகை தந்திருந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு நுழைவாயில் வளாகத்தில் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதோடு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனையடுத்து பாதுகாப்பு கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், பாடநெறி எண் – 15 இன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இளங்கலை பட்டதாரிகளால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் எண்-15 பாடநெறியில், பாகிஸ்தான், பங்களாதேஷ், ருவாண்டா, மாலத்தீவு, இந்தோனேசியா, நேபாளம், அமெரிக்கா, செனகல் மற்றும் சவுதி அரேபியாவை உள்ளிட்ட 17 நாடுகளை சேர்ந்த 144 இளங்கலை பட்டதாரிகள் கலந்துகொண்டனர். அவர்களில் 78 இராணுவ அதிகாரிகள், 23 கடற்படை அதிகாரிகள், 26 விமானப்படை அதிகாரிகளும் பீஎஸ்சீ பட்டத்தை பெற்றுகொண்டனர்.
பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் அக்கல்லூரிக்கு வருகை தந்த விரிவுரையாளருக்கு அன்பான வரவேற்பளித்ததோடு, நிகழ்வின் பங்கேற்பாளர்களுக்கும் அறிமுகம் செய்தார்.
அதேபோல் நிகழ்வின் நிறைவம்சமாக இடம்பெற்ற கேள்வி-பதில் அமர்வைத் தொடர்ந்து இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா அவர்களுக்கு சிறப்பு நினைவு பரிசொன்றை வழங்கி நன்றிகளையும் கூறிக்கொண்டார். கல்லூரி வளாகத்திலிருந்து விடைபெறும் முன்பாக தளபதியவர்களால் கல்லூரியின் விருந்தினர் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் இளங்கலைப் பட்டதாரிகளுக்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “வழக்கமான முறைகளை விட எதிரிகளுக்கு பல வழிமுறைகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தீவிரவாத குழுக்கள் இன்று பொது மக்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அணுகுமுறைகளை முன்னெடுக்கின்றனர். மிகவும் சூட்சுமான முறையில் ஆட்சேர்ப்பு, தூண்டுதல், பிரச்சாரம் மற்றும் ஆயுதங்கள் கொள்வனவு செய்தல் மற்றும் வரையறையற்ற பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். அதனால் ஒற்றுமைக்கான தேசிய பொறிமுறைகளுடன் இணங்கிச் செயற்பட நாம் மறுக்கின்ற பட்சத்தில் நமது தேசிய பாதுகாப்பு கட்டமைப்பில் மாற்ற முடியாத இடைவெளிகள் ஏற்படுவதற்கு இடமளித்துவிடுவோம். “சாதிக்க முடியாத இலக்குகளையும் அடைவதற்கான ஒரே கருவியாக ஒற்றுமை மட்டுமே உள்ளது என்று நான் நம்புகிறேன்”. இந்த பரந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டுதான் இலங்கை இராணுவத்தின் 2020 – 2025 முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேற்படி விரிவான மூலோபாய திட்டமிடலை செயற்படுத்துவதற்கு நாடு எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பது தொடர்பிலான மூலோபாய சிந்தனைகளை கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. அதேபோல் 2020 – 2025 முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் அதிமேதகு ஜனாதிபதியவர்களின் “சௌபாக்கியத்திற்கான தெரிவு” என்ற கொள்கைத்திட்டத்துடன் எவ்வாறு பொருந்துகிறது என்பது குறித்தும் விரிவான புரிதலை கொண்டிருப்பது அவசியமாகும். அத்தோடு நமக்கான பயிற்சிகள் இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்புச் சூழ்நிலை மற்றும் அதற்குள்ளான ஆயுத படைகளின் வகிபாகம் பாதுகாப்பு கொள்கைகள் அதற்கு தகுந்த படைகளின் கட்டமைப்பு மற்றும் திறன் ஆகியவை தொடர்பான புரிதல்களை ஏற்படுத்த கூடிய வகையில் அமைந்திருக்க வேண்டியதும் அவசியமாகும். அதேபோல் மேற்படி காரணிகளை மீளாய்வு செய்து ஆயுத படையினரை அர்ப்பணிப்பு மற்றும் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளகூடிய வகையிலும் கட்டமைக்க வேண்டியது அவசியமாகும் எனவும் ஜெனரல் ஷவேந்திர சில்வா வலியுறுத்தினார்.
“அண்மைய காலங்களில், இராணுவம் குறிப்பாக போர்ச் சூழலுடன் தொடர்பற்ற பணிகளை மேற்கொண்டது, எதிர்காலத்திலும் இவ்வாறான பணிகளை தொடர நேரிடலாம். எனவே, நமது ஆயுதப் படைகள் அதற்கு தகுந்த வகையில் முழுமையாக பயிற்றுவிக்கப்படவேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்ற வகையில் உரிய வளங்கள் மற்றும் சட்டங்கள், அதிகாரங்களுடன் பாதுகாப்பு தொடர்பான வகிபாகத்தை பேண வேண்டும், மேலும் புதிய மூலோபாய ரீதியில் வரையறுக்கப்பட்ட மற்றும் நியாயமான நோக்கங்களுக்காக ஆயுதப்படைகளை பயன்படுத்துவதன் மூலம் நிறுவன கட்டமைப்பின் மட்டத்திலும் சர்வதேச அளவிலும் பொறுப்புகூறலுடன் செயற்பட முடியும் என்றும் கூறினார்.
இராணுவத் தளபதியின் உரையின் முக்கிய விடயங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
“நான் கல்வி பயின்ற கல்விக்கூடத்தில் உங்களுக்கு உரை நிகழ்த்துவதை மரியாதையாகவும் பாக்கியமாகவும் கருதுகிறேன்.
இந்த மதிப்புமிக்க நிறுவனம் கட்டளைகள், திறன், அறிவுசார் ஊழியர்களை கொண்ட்ட கூட்டிணைப்பாகும்.முப்படை அதிகாரிகளுக்கும் நிறுவனத்தில் உயர் பொறுப்புகளை வழங்க வேண்டும் வலியுறுத்தியதன் விளைவாக இன்றைய நிலைமைக்கு என்னை உருவாக்கிய பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரிக்கு உயர்வான மரியாதையை செலுத்துகிறேன்.
அதேபோல் ஆரம்ப கட்டத்தில், ஒரு அதிகாரியின் தொழில் வாழ்க்கையின் மிக முக்கியமான அடைவை ஒன்றை நீங்கள் நிறைவு செய்கிறீர்கள் என்பதை நினைவூட்டுகிறேன். எனவே, இந்த நிறுவனத்திலிருந்து கற்றல் மற்றும் வடிவமைப்பை உங்கள் ஆளுமை, தொழில்முறை மற்றும் சிந்தனை முறை ஆகியவற்றை ஊக்குவிப்பாக எடுத்துக் கொண்டு உங்களது முன்னேற்றத்தை ஆரம்பிக்க வேண்டும்.
மேலும் நமது நட்பு நாடுகளைச் சேர்ந்த பயிலிளவல் அதிகாரிகள் தொடர்பாக சிறப்பாக எடுத்துரைக்க விரும்புகிறேன். சர்வதேச மாணவர்களின் பங்கேற்பானது, வெவ்வேறு கலாச்சார், கல்வி, கோட்பாடு மற்றும் தனிப்பட்ட மாறுபாடுகளின் அடிப்படையில் வெவ்வேறு கொள்கைகளின் கீழ் எவ்வாறு நிலைமையைக் காண முடியும் என்பதை விளங்கிக்கொள்வதற்கு பயிலிளவல் அதிகாரிகளுக்கு வாய்ப்பாக அமையும் என்றும், அதனால் பாடநெறிக்கு மெலும் தரம் சேர்க்கப்படுகிறது எனவும் இப்பாடநெறியின் போது நீங்கள் கொள்கை ரீதியான, தந்திரோபாய மற்றும் கொள்கை ரீதியான அறியியல் திறன்களை மேம்படுத்துகொண்டிருப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.
இராணுவக் கோட்பாட்டாளரான, கார்ல் வான் கிளாஸ்விட்ஸ் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு “போரின் மூடுபனி” என்னும் நூலில் மைதானத்தில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை அறிந்து வைத்திருப்பது எப்போதுமே கடினமானது என குறிப்பிட்டுள்ளார். எனவே நேற்றை போரை வெற்றிகொண்டதால் நவீன மோதல்களையும் அதேபோன்று அணுக முடியுமென கருதுவது மிகவும் ஆபத்தானதும் விவேகமற்றதுமான அனுமானமாகும். எனவே வெறும் நிகழ்தகவுகளை மாத்திரம் நம்பிகொண்டிருப்பதை விடவும் சாத்தியமான சிந்தனைகளை தூண்டுவது மிகவும் அவசியமாகிறது.
சமகால பிரச்சினையை கடக்க வேண்டுமானால் அவை தொடர்பில் ஆழமாக கற்றறிய வேண்டும். எனவே, நிலையான விழிப்புணர்வு மற்றும் பரந்த அளவிலான தெரிவுகள் என்பன மாத்திரமே புதிய சவால்களுக்கு ஏற்ப நமது படைகளை வடிவமைக்க ஒரே வழியாகும் எனவும் வலிறுத்தினார்.
தீவிரவாத குழுக்கள் இன்று பொது மக்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அணுகுமுறைகளை முன்னெடுக்கின்றனர். மிகவும் சூட்சுமான முறையில் ஆட்சேர்ப்பு, தூண்டுதல், பிரச்சாரம் மற்றும் ஆயுதங்கள் கொள்வனவு செய்தல் மற்றும் வரையறையற்ற பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இன்றளவில் சைபர் தாக்குதல்கள் எதிரிகள் விரும்பிய இலக்குகளை அடைவதற்கான மிகச் சிறந்த வழிமுறையாக மாறியுள்ளது. இது எதிரிகளின் கையொப்பத்தை மறைப்பதற்கும், பாரம்பரிய பாதுகாப்பு வழிகளை தகர்க்கவும் அவர்களின் இலக்கை அடையவும் உதவியாக அமைந்துள்ளது.
மோதல்களுக்கு எவ்வேளையிலும் தயாராக இருந்தாலும் எதிர்பாராத மோதல் நிலைமைகளுக்கு தயாராக இல்லாமல் இருப்பதானது பேரழிவை தருகிறது. குறிப்பாக எதிரிகளுக்கு வழமையான முறைமைகளுக்கு மாறான புதிய உபாயங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும். மறுமுனையில் தீவிரவாத குழுவினர் இன்று பொதுமக்களுக்கு பரீட்சயம் இல்லாத முறைமைகளை கொண்டுள்ளதோடு அதனூடாக மிகவும் சூட்சுமான முறையில் ஆட்சேர்ப்பு, தூண்டுதல், பிரச்சாரம் மற்றும் ஆயுதங்கள் கொள்வனவு செய்தல் மற்றும் வரையறையற்ற பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.
மேலும் மோதலை தூண்டுவோரின் நோக்கங்களை அறிந்துகொள்வது கடினமானதாகும். அதேபோல் மோதல்களும் நல்ல மற்றும் தவதறான நோக்கங்களை அடிப்படையாக கொண்டதாகவும் அமைந்திருக்கூடும். ஆசியா-பசுபிக் பிராந்தியத்தின் பிராந்தியத்தின் பொருளாதார முன்னேற்றம் காரணமாக பாதுகாப்பு செயற்பாடுகளில் பரிணாமங்களை உருவாக்க வேண்டிய அவசியம் தோன்றியுள்ளது. குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளுக்கு புவிசார் மூலோபாய பாதுகாப்பு பொறிமுறைகளை மேம்படுத்துவதற்கான அவசியங்களும் தோன்றியுள்ளன.
உலகெங்கிலும் உள்ள பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் குற்றச் செயல்களால் நிகழ்கால பாதுகாப்பு சூழலுக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலால் வன்முறைகள் இடம்பெறுகின்றன. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் அரசியல் மற்றும் சமூக பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. எனவே, இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்கு இராணுவத்தின் தயார் நிலைமை அவசியமாகும்.
ஜனநாயக சமூகங்கள் மத்தியில் ஆயுதப் படைகளின் அளவு மற்றும் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு படைகளுக்கான செலவீனங்கள் தொடர்பிலான நியாயமாக கேள்விகள் மற்றும் ஆயுதப் படைகள் பன்முகத் திறன்கள் கொண்டதாகவும் நவீனத்துவத்தில் இராணுவ முயற்சியில் கட்டமைக்கப்பட்ட பொருளாதாரத்தை அடித்தளமாகக் கொண்டதாகவும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
நவீனகால பாதுகாப்பு மற்றும் நிகழ்கால சூழலின் நடைமுறைகள் முன்பை விட இராணுவ சக்தியின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளன. இதனால் அடுத்த சில வருடங்களிலும் கூட உலகம் ஒரு சிக்கலான, நிலையற்ற, கணிக்க முடியாத மற்றும் ஆற்றல்மிக்க பாதுகாப்பு சூழலை எதிர்கொள்ள நேரிடும் என நம்புகிறேன்.குறிப்பாக மோதல்களின் தன்மையை பொருத்து பாதுகாப்பு சூழல் கட்டுப்படுத்த கூடியதாகவும் கட்டுக்குள் அடங்காததாகவும் மாற்றம் அடைகிறது. எவ்வாறாயினும் நாம் வாழ வேண்டும் எனில் சூழலுக்கு மாற வேண்டும் என்பதுதான் நிதர்சனமாகும். இலங்கையின் புவிசார் மூலோபாய அமைவிடம், தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகளால் பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
பொதுவாக வெளிநாட்டில் இடம்பெறும் மோதல்களை மையப்படுத்திக்கொண்டு அடிப்படைவாதச் சிந்தனைகள் மற்றும் வன்முறைச் செயற்பாடுகள் இடம்பெறுவதோடு, அதன் விளைவாக உள்நாட்டு மக்களையும் எதிரிகளாக கருதிக்கொண்டு செயற்படுவோரால் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றுமொரு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதோடு. மேற்கத்திய மற்றும் கிழக்கு உலக அதிகார தொகுதிகளின் மேலாதிக்கச் செயற்பாடுகளின் விளைவாக பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அடிப்படை வாதத்தை மையப்படுத்திய தாக்குதல்கள் இடம்பெறக்கூடும் அவை பொருளாதார,இராஜதந்திர அல்லது இராணுவ வழிமுறைகளில் நடத்தப்படலாம் என்றார். மேற்கு மற்றும் கிழக்கு அதிகாரத் தொகுதிகள் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மேலாதிக்கத்திற்கான பாதுகாப்புப் போட்டி அல்லது கருத்தியல் போரில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன, இது பொருளாதார, இராஜதந்திர, பினாமி அல்லது இராணுவ வழிமுறைகளின் மீது நடத்தப்படலாம்.
இந்த செயற்பாடுகள் இலங்கையின் எதிர்காலத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமையும். எனவே வெறுமனே தந்திரோபாய செயற்பாடுகள் மூலம் மாத்திரம் வெற்றிகளை அடைந்துகொள்ள எதிர்பார்ப்பதும் எதிரிகளின் ஒரு தொகுதியை மற்றும் வெற்றிகொள்ள முற்படுவதும் பொருத்தமற்றதாகும். வழமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மாறாக வேறு சிறிய அளவிலான அச்சுறுத்தல்களுக்கும் முகம்கொடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. காலநிலை மாற்றம், நாடுகடந்த குற்றங்கள், இணைய பயங்கரவாதம் மற்றும் நிலையற்ற பிரச்சினைகள், பொருளாதார ஸ்தம்பிதம் மற்றும் பேரழிவு தரும் தொற்றுநோய்கள் உள்ளிட்ட பிரச்சினைகளும் எழுந்துள்ளன. அதே சமயத்தில் பழமையான அச்சுறுத்தல்கள் புதியவகை அச்சுறுத்தல்கள் என வேறுபாடுகளை ஏற்படுத்துவதும் கடினமானது. எனவே அத்தகைய கணிப்புக்களை சரியாக மேற்கொள்ள வேண்டுமாயின் அதற்கான ஆளணி மற்றும் தொழில்நுட்ப வளங்களும் அவசியமாகும்.
போரின் போது எதிரிகள் தங்களது நகர்வுகள் மற்றும் வழிமுறைகளை நுட்பமாக கட்டமைக்கிறார்கள், இவ்வாறன விடயங்களில் உண்மை நிலைமைகைள ஏற்றுக்கொள்ள நாம் பின்வாங்ககூடாது. எனவே, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதி என்ற வகையில் நான் ஒருபோதும் எதிரியின் தோல்விகளை குறைத்து மதிப்பிடுவதில்லை அதேபோன்று, சொந்த படைகளின் வெற்றிக்கான சாத்தியக்கூறுகளை மையப்படுத்தி தயார்படுத்தல்களை மேற்கொள்வதும் இல்லை. எனவும் தெரிவித்தார்.
இலங்கை இராணுவம் தேசத்தின் மீட்பாளர்கள் என்ற அடையாளத்தை நீண்ட காலமாகக் கொண்டுள்ளது ஏனெனில் இராணுவம் ஒவ்வொரு அவசரநிலைகளிலும் தலையிட்டு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. “இலங்கையின் குடிமக்கள் எங்கள் தாய்நாட்டிற்கான எங்கள் தியாகங்களையும் பங்களிப்புகளையும் பாராட்டுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.” எதிர்வரும் காலத்திலும் இராணுவம் மக்களின் உயிர்கள், சொத்துக்கள் மற்றும் நலன்களை பேணுவதில் அக்கறை செலுத்தும். வளர்ந்து வரும் நாடு என்ற வகையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு முன்னுதாரணமாக நமது நாடு மாறியிருக்கிறது. அவ்வப்போது இந்த நிலைமைகள் மாற்றமடைந்துகொண்டு இருக்கும். எவ்வாறாயினும் நாட்டின் முன்னேற்றத்திற்கான மக்களின் கோரிக்கை அவ்வண்ணமே உள்ளது.
எனவே, இலங்கை இராணுவப் படைகளை இப்போது ஒரே விதமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தகுந்தவையாக விரிவுபடுத்த முடியாது, மாறாக அச்சுறுத்தல்களின் தன்மைகளுக்கு ஏற்ப பயணிக்கும் வகையில் கட்டமைக்கப்பட வேண்டும். எனவே, தற்போது நம்மிடம் உள்ள எண்ணக்கருக்கள், கோட்பாடுகள் மற்றும் திறன்கள் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம் அதனால் மேலும் நாம் மறுசீரமைக்க வேண்டும் என்றார்.
இன்று ஒரு சில முக்கியமான கேள்விகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்; என்ன அச்சுறுத்தலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்? ஆயுதப் படைகள் எந்த அளவில் பயன்படுத்தப்படும்? எதிர்காலத்தில் எந்தச் சூழலில், சுதந்திரம் மற்றும் கட்டுப்பாடுகளின் கீழ் ஆயுதப் படைகள் செயல்படும்? மிக முக்கியமாக, மோதலின் எந்தப் பகுதியை இராணுவம் ஒட்டுமொத்த பாதுகாப்புக் கட்டமைப்பின் கருவியாகப் பயன்படுத்தப்படும்? யார் சண்டையிடுவார்கள், யாருடன் போரிடுவார்கள், எங்கு போரிடுவார்கள், என்ன உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் என்று ஆயுதப் படைகள் கணிக்க இந்த கேள்விகள் வழிவகுக்கும்.
மேற்படி விடயங்களுடன் தொடர்புடையதான விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தி எதிர்பார்க்கும் இராணுவ இலக்குகளை அடைந்துகொள்ளகூடிய வகையில் அடிக்கடி இராணுவ கட்டமைப்பை மறுசீரமைப்பது அவசியமாகும். அதன்படின நிலையாக தேசிய பாதுகாப்பை உறுதி செய்துகொள்வதற்கு பல்துறை சார் திறன்களை கொண்டதார இராணுவ கட்டமைப்பு வடிவமைக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படகூடிய திறன் மிக்கதாகவும் இராணுவம் இயங்க வேண்டும்.
இறுதியாக, இலங்கை தற்போது உள்ளுர் மற்றும் சர்வதேச சூழல்களில் தோன்றிய பொருளாதார முன்னேற்றம், ஊழலை மட்டுப்படுத்தல், போர்க்குற்றங்களுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான ஈடுபாடு, வெற்றி-வெற்றி செயற்றிட்டத்தை நோக்கிய வெளியுறவுக் கொள்கைக்கு புத்துயிர் அளிப்பது, நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தேசிய பாதுகாப்பு அணியை வலுப்படுத்துதல், சமூக-பொருளாதார மேம்பாடு, அண்மைய காலமாக பரவிவரும் தொற்றுநோய் நிலைமை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு மற்றும் அரசாங்கத்திற்கு எழுந்துள்ள நெருக்கடிகள் உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியில் சாதகமான பயணத்தில் முன்னேறி வருகிறது.
தேசிய பாதுகாப்புக்கு வரும் சவால்களை எதிர்கொள்வதற்கு சிறந்த கருவியாக அனைத்து தரப்புக்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பையே கருத முடியும். இது சம்பந்தமாக, இராணுவ பிரதானிகளுக்கு மூலோபாய சூழல் குறித்து உறுதியான புரிதல் இருக்க வேண்டும். எனவே, இன்று அதிகாரிகள் அரசாங்கத்தின் அனைத்து கூறுகளினதும் ஒருங்கிணைப்பு மற்றும் தேசிய நோக்க கொள்கைகளை புரிந்துகொண்டு அதனுடன் இணைந்ததாக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமாகும். “இலங்கை இராணுவம் ஒரு வளமான மற்றும் நிலையான தேசத்தை அபிவிருத்தி செய்வதற்கும் பராமரிப்பதற்குமான திறன்களை கொண்டுள்ளது”. எனவும் சுட்டிக்காட்டினார்.
விரைவில் நீங்கள் பணியாளர் கல்லூரியில் தேர்ச்சி பெற்றவர் என்ற பண்புடன் புதிய நியமனங்களைத் தொடங்குவீர்கள். எனவே, இன்றைய பாதுகாப்பு சூழல் மற்றும் ஒரு தளபதி, பணியாளர் அதிகாரி அல்லது பயிற்றுவிப்பாளிடம் எதிர்பார்க்கப்படும் புரிதலை கொண்டவர்களாக நீங்கள் இருப்பீர்கள் எனவும் எதிர்பார்க்கிறேன். அதனால் இங்கும் இங்கிருந்து சென்ற பின்னரும் நீங்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற அதேவேளை சிக்கலான இராணுவ பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை வழங்குவீர்கள் எனவும் நம்புகிறேன் என்றார்.
இந்த மதிப்பிற்குரிய பயிற்சி நிறுவனத்தின் தரத்தை இராணுவக் கல்விக்கு மிகவும் உகந்த நிலைக்கு உயர்த்துவதற்கும் பராமரிப்பதற்கும் அயராத முயற்சிகளை மேற்கொண்ட பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நான் சிறப்பு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இறுதியாக, நட்பு நாடுகளைச் சேர்ந்த மாணவர் அதிகாரிகளுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் எதிர்கால முயற்சிகளில் சிறந்து விளங்க உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் இருந்து வரவிருக்கும் உங்கள் அனைவருக்கும் இனிவரும் காலங்களில் உங்கள் இராணுவப் பணியில் வெற்றியின் உச்சத்தை அடைய எனது ஆசிகள் எப்போதும் உண்டு.