ஒமிக்ரோனில் இருந்து பூஸ்டர் தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கிறது -விஞ்ஞானிகள்!
மூன்றாவது பூஸ்டர் கொவிட் 19 தடுப்பூசி ஒமிக்ரோன் தொற்று நோயாளிகள் சுமார் 75% பேருக்கு எந்த கோவிட் அறிகுறிகளும் வராமல் தடுக்கிறது என இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஒமிக்ரோன் திரிபுக்கு எதிரான நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்த இரண்டு தடுப்பூசிகள் போதாது என இது குறித்த ஆய்வு முடிவில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஒமிக்ரோன் மற்றும் டெல்டா வைரஸ் திரிபுகளுக்கு எதிரான தடுப்பூசிகள் குறைந்தளவு செயல்திறனை வெளிப்படுத்துவதாக ஆரம்ப பகுப்பாய்வு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
ஆனால் மூன்றாவது பூஸ்டர் சுமார் 75% பேருக்கு எந்த கோவிட் அறிகுறிகளும் வராமல் தடுக்கிறது என இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 448 புதிய ஒமிக்ரோன் திரிபால் பாதிக்கப்பட்ட தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். இவற்றுடன் அந்நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த ஒமிக்ரோன் தொற்று நோயாளர் தொகை 1,265 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் நேற்று வெள்ளிக்கிழமை மொத்தம் 58,194 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். இது ஜனவரி 9-ஆம் திகதிக்கு பின்னர் இங்கிலாந்தில் பதிவான அதிகபட்ச ஒரு நாள் தொற்று நோயாளர் தொகையாகும்.