கிளிநொச்சி கனகபுரம் வீதியில் விபத்து.

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் பலத்த சேதமடைந்துள்ளது.
குறித்த விபத்து இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்