தமிழ் கட்சி தலைவர்கள் கொழும்பில் கூடும் நிகழ்வு
சமகாலத்தில், ஈழ, மலையக தமிழ், முஸ்லிம் தேசிய இனங்களை பிரதிநிதித்துவம் படுத்தும் கட்சி தலைவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் ஒன்றாக அமர்ந்து உரையாடும் நிகழ்வு நாளை கொழும்பில் கூடவுள்ளது.
டெலோ அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும், இதன் முதல் நிகழ்வு நவம்பர் முதல் வாரம் யாழ் திண்ணையில் நிகழ்ந்தது.
இப்போது இரண்டாம் நிகழ்வு கொழும்பில் நிகழ்கிறது.
இதில் இரா. சம்பந்தன் (ததேகூ), மனோ கணேசன் (தமுகூ), ரவுப் ஹக்கீம் (ஸ்ரீமுகா), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), த. சித்தார்தன் (புளொட்), சீ.வி. விக்கினேஸ்வரன் (ததேமகூ), சுரேஷ் பிரேமசந்திரன் (ஈபிஆர்எல்எப்), சிறிகாந்தா (ததேக) ஆகியோர் கலந்து கொள்வதாக ஏற்பாட்டாளர் செல்வம் அடைக்கலநாதனிடம் உறுதி அளித்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கடந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத ததேகூ தலைவர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பம் தெரிவித்துள்ளதாகவும் , இக்கூட்டத்தில் தமிழ் பேசும் தேசிய இனங்கள் தொடர்பான அபிலாஷைகள் அடங்கிய பொது குறைந்தபட்ச யோசனைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை ஆராய்ந்து தயாரிக்க முனைவதாகவும், நமது மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்சிகள் தயாரிக்கும் ஏற்புடைமை உள்ள இந்த ஆவணம், இலங்கை அரசு, இந்திய அரசு உட்பட தேசிய, சர்வதேச தரப்புகளிடம் முன்வைக்கப்படும்எனவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.