சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் 5 கைதிகள் மருத்துவமனையில் அனுமதி…

பதுளை சிறைச்சாலைக்குள் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி ,இந்த மோதல் சம்பவத்தில் 5 கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு காயமடைந்த கைதிகள் அனைவரும் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் குறித்த விரிவான விசாரணைகளை சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.