பொரளை கொள்ளைச் சம்பவம்: சந்தேகநபர்களுக்கு வலைவீச்சு!
பொரளைப் பகுதியில் உள்ள நகையகம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியிலுள்ள சி.சி.ரி.வி. காணொளி காட்சிகளை ஆராய்ந்து, விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லை.
பொரளைப் பகுதியில், நேற்று முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, நகையகம் ஒன்றில் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றனர்.
இதன்போது, சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.