சிறுவர் கழகங்களின் தலைவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிப்பட்டறை!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் றகமா நிறுவனத்தாரால் பிரதேச மட்ட சிறுவர் கழகங்களின் தலைவர்களிற்கான தலமைத்துவத்தினை வலுப்படுத்தும் பயிற்சி இன்று(12) மாந்தை கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனூடாக சிறுவர் சமூகத்தை நிலைத்த மனித வளம் மிக்க சமுதாயமாக உருவாக்குவதே குறித்த திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் இப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட தலைவர்களூடாக குறித்த கழகங்க அங்கத்தவர்களுக்கு அவை கொண்டு செல்லப்படும் வகையில் இது அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.