தவறு ஒன்று நடந்தால் அதை ஏற்றுக்கொள்வது அவசியம்!
“நாட்டில் சமையல் எரிவாயு ஒழுங்குபடுத்தல்கள் தொடர்பில் பல குறைபாடுகள் உள்ளன. இதனை அரசு என்ற ரீதியில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
– இவ்வாறு பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
சீனிகம தேவாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டில் சமையல் எரிவாயு ஒழுங்குப்படுத்தல் தொடர்பில் குறைபாடு உள்ளதென்பதை ஏற்றுக்கொள்கின்றோம். அது எமது ஆட்சியில் மாத்திரமல்ல. கடந்த 40 வருடங்களாக இந்தப் பிரச்சினை காணப்பட்டது.
அதனை உள்ளார்ந்த ரீதியில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தவறு ஒன்று நடந்தால் அந்தத் தவறை ஏற்றுக்கொள்வது அவசியம்” – என்றார்.