யார் ஆக்கிரமித்திருந்தாலும் கோவில் இடங்கள் மீட்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு
யார் ஆக்கிரமித்து இருந்தாலும் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் இடங்களை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய கோவில் சுற்றுச்சுவர் கோவில்குளம் வாகன நிறுத்துமிடம் கருங்கற்கள் பதிக்கும் பணி என பல்வேறு திருப்பணிகள் சுமார் 5 கோடி மதிப்பில் நடைபெற்று, ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு பெற்று குடமுழக்கு நடைபெறும் என இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருள்மிகு சிறுவாபுரி பாலசுப்பிரமணி கோவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோருடன் சாமி தரிசனம் செய்து பின்னர் குடமுழுக்கு விழாவிற்காக கோவில் வளாகத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்துதரைதளம்அமைப்பதற்கான பூஜையை துவங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு,
தமிழக முதல்வரின் உத்தரவின் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளாக குடமுழக்கு நடைபெறாத கோவில்களை ஆய்வு செய்து குடமுழுக்கு நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும்
சிறுவாபுரி முருகன் கோவிலில் ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்கு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சுற்றுச்சுவர் கோவில்குளம் வாகன நிறுத்துமிடங்களில் கருங்கற்கள் பதிக்கும் பணி என பல்வேறு திருப்பணிகள் சுமார் 5 கோடி மதிப்பில் நடைபெற்று வருவதாகவும் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் இடங்களை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த மெதூர் பழவேற்காடு மேலூர் கோவில்களை சீரமைக்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 44 ஆயிரம் திருக்கோவில்கள் உள்ளதாகவும் ஆக்கிரமிப்புகள் சீரமைப்பு பணிகள் குறித்து தகவல் அளித்து உரியமுறையில் சுட்டிக் காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.
மேலும், யார் ஆக்கிரமிப்பில் கோவில் நிலங்கள் இருந்தாலும் மீட்டு கோவில் நிலம் மீண்டும் கோவிலிடம் ஒப்படைக்கப்படும் என்றும் ஆண்டார்குப்பம் கோவில் குளம் கோவில் நிலங்கள் ஆய்வு செய்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.