அமைச்சர்களை அவசர கூட்டத்திற்கு அழைத்தார் பிரதமர்.

அரசின் சிரேஷ்ட அமைச்சர்களை நாளை காலை விசேட சந்திப்பொன்றுக்கு அழைத்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.
நாளை காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பின் காரணமாக நாளை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடும் நடக்கும் வாய்ப்பில்லையென அரசின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு அவசரமாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.