பண்டிகையின்போது மதுபான விநியோகத்திற்கு அனுமதி வழங்கவில்லை.

நத்தார் பண்டிகையின்போது ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை என கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நத்தார் தினத்தன்று சுற்றுலா சபையினால் அங்கீகரிக்கப்பட்ட தங்குமிட வசதிகள் கொண்ட ஹோட்டல்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரமே மதுபானம் வழங்குவதற்கு கடந்த காலங்களில் அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு நத்தார் தினத்தன்று மதுபானம் வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக இதுவரையில் எவ்வித கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இது தொடர்பாக இதுவரை தீர்மானமும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.