விவாதப் போட்டியில் 3ம் இடத்தினைப்பெற்ற புதுக்குடியிருப்பு பிரதேசசபை அணி கெளரவிப்பு!

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ் மொழி மூலமான விவாத போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கொழும்பு இலங்கை மன்ற பயிற்சி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதி அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற குறித்த விவாத போட்டியில் மூன்றாம் இடத்தினை புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் விவாத அணி பெற்றுக்கொண்டது.
இதற்காக குறித்த அணியினருக்கு வெற்றிக்கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.