ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் இருந்து 33 கி.மீ. மேற்கில் இன்று அதிகாலை 3.47 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. அதிகாலை வேளையில் மக்கள் தூக்கத்தில் இருந்துள்ளனர். இதனால், ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.