மீரிகமவில் ரயிலை மோதித் தள்ளிய டிப்பர்.

ரயிலையும் விட்டுவைக்காத டிப்பர் மீரிகமவில் ரயிலை மோதித் தள்ளிய டிப்பரினால் ரயில் பலத்த சேதமடைந்துள்ளதுடன் டிப்பர் சாரதி சிறுகாயங்களுடன் தப்பியுள்ளார்.
ரம்புக்கனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலுடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் இன்று (15) அதிகாலை 5.35.மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மீரிகம மற்றும் வில்லவத்த ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மீரிகம – திவுலபிட்டிய பிரதான வீதியில் பயணித்த டிப்பர் ரக வாகனம் மீரிகம ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையின் ஊடாக கவனக்குறைவாக கடந்துள்ளது. இதன்போது, கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.