அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் 100 நாட்கள் செயற்பட புதிய ஜனாதிபதி?
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் முதன்மை நோக்கத்துடன் 100 நாட்களுக்கு மாத்திரமே ஜனாதிபதி பதவி வைத்திருப்பது என்ற வாக்குறுதியின் அடிப்படையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து இந்த வேட்பாளரை களமிறக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் வாக்குறுதி மாத்திரமன்றி அதற்கான வேலைத்திட்டம், உரிய வாக்குறுதியை நிறைவேற்றக்கூடிய நம்பிக்கைக்குரிய பின்னணி கொண்ட விசேட நபர் ஒருவரை நியமிக்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னணி சமூக ஆர்வலர்கள் குழுவினால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.