பைரி டைசா உயிரியல் பூங்காவில் இருக்கும் பெண் சிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி.
பெல்ஜியம் நாட்டில் உள்ள பைரி டைசா உயிரியல் பூங்காவில் இருக்கும் பெண் சிங்கத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பைரி டைசா உயிரியல் பூங்காவில் உள்ள நான்கு சிங்கங்களில் ஒன்று டாணா எனப்படும் பெண் சிங்கம். கடந்த சில நாட்ளாக டாணா சிங்கத்திற்கு காய்ச்சல், இருமல் மற்றும் பசியின்மை இருந்துள்ளது. இதையடுத்து செய்த சோதனையில் டாணாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பூங்காவில் உள்ள பிற சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பைரி டைசா பூங்கா தெரிவித்துள்ளது. மேலும், பூங்காவில் உள்ள சிங்கங்களை பராமரிக்கும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் பூங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.