பகலிரவு டெஸ்ட்: வார்னர், லபுசக்னே சிறப்பு; வலிமையான நிலையில் ஆஸி.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் அடிலெய்டில் தொடங்கியது. பகல்- இரவு போட்டியான இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இதில் மார்கஸ் ஹாரிஸ் 3 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
அடுத்து வார்னர் உடன் லபுசாக்னே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தியது.
இதில் இருவரும் அரைசதம் கடந்தனர். இதையடுத்து சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 95 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
ஆனாலும் மறுமுனையில் பொறுமையைக் கடைப்பிடித்த மார்னஸ் லபுசாக்னே அணி சதத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறார்.
இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் லபுசாக்னே 95 ரன்களுடனும், ஸ்மித் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.