கால்நடை வளர்ப்பினை ஊக்குவிக்கும் முகமாக சுப்பர் நெப்பியர் புல்லினக் கட்டைகள் வழங்கி வைப்பு!

உலக உணவுத்திட்டத்தினால் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் அமுல்படுத்தப்பட்டுவரும் R5n செயற்திட்டப் பயாளிகளுக்கு பண்ணை முறையிலான கால்நடை வளர்ப்பினை ஊக்குவிக்கும் முகமாக சுப்பர் நெப்பியர் எனும் புல்லினக் கட்டைகள் இன்று(16) வழங்கி வைக்கப்பட்டது .
KOICA நிறுவனத்தின் நிதிஅனுசரனையில் உலக உணவுத் திட்டம் மற்றும் துனுக்காய் பிரதேச செயலகம் மற்றும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் தினைக்களமும் இணைந்து குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
இதனூடாக துனுக்காய் பிரதேசசெயலர் பிரிவைச்சேர்ந்த 47 மாட்டுப் பண்னையாளர்கள் பயன் பெற்றுள்ளதுடன் பண்ணைமுறையிலான மாடுவளர்ப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு ரூபா 285,000 பெறுமதியான நிரந்தர மாட்டுக்கொட்டகை அமைப்பதற்கான நிதி வழங்கப்பட்டு கொட்டகைகள் அமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனூடாக பால் உற்பத்தியினை அதிகரிப்பதுடன் சிறந்த வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச்செயலக முகாமைத்துவ அலகின் உலக உணவு திட்டங்களுக்கான பணிப்பாளர் திருமதி.பவானி கணேசமூர்த்தி, துணுக்காய் பிரதேச செயலாளர் ஆ.லதுமீரா, கால்நடை வைத்தியர் Dr.மரியாதுரம், துணுக்காய் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வோல்டிசொய்ஷா, கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் கோனேஸ்வரன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,
உலக உணவுத்திட்ட உப அலுவலகப் பணியாளர் திரு. வ.கஜானனன் மற்றும் பயனாளிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.