காணாமல் ஆக்கப்பட்ட அமெரிக்க நாட்டின் துறவியான அருட்தந்தை ஹேபியரின் உருவச் சிலை திறப்பு.
கடந்த 1990 ஆண்டு மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்ட அமெரிக்க நாட்டின் துறவியான அருட்தந்தை ஹேபியரின் நினைவாக வாவிக்கரை பூங்காவிற்கு அருகாமையில் அமைக்கப்பட்ட உருவச் சிலை வியாழக்கிழமை (15) இலங்கைக்கான ஜேசுசபையின் மேலாளர் அருட்தந்தை ரொக்சர் கிரே, மற்றும் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகையினால்; திறந்து வைக்கப்பட்டது.
இலங்;கைக்கான ஜேசுசபையால் அமைக்கப்பட்ட அருட்தந்தை ஹேபியரின் நினைவு உருவச் சிலையை வைபவரீதியாக திறந்துவைக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை இலங்கைக்கான ஜேசுசபையின் மேலாளர் அருட்தந்தை ரொக்சர் கிரே, மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்டதிலுள்ள தேவலாயங்களின் பங்கு தந்தைகயான அருட்தந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டு உருவச் சிலையை திறந்து வைத்தனர்.
மட்டக்களப்பு கூடைப் பந்தாட்டத்தின் பிதா மகனான இயேசு சபைத் துறவி அருட்தந்தை ஹேபியர் அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் ஜெனிங்ஸ் நகரில் 13.10.1923 ஆண்டு பிறந்த அவர் 17 வயதில் கத்தோலிக்க குருவாக வேண்டும் என்ற நோக்கில் இயேசு சபையில் இணைந்து கொண்டார்.
இயேசு சபையோயில் தனது ஆரம்பக் கற்கையினை பூர்த்தி செய்து கொண்ட பிறகு ஒரு துறவி மாணவனாக இலங்கைக்கான மறைபரப்பு பணியில் இணைந்து பணியாற்ற 1948 ஆம் ஆண்டு இலங்கை திருகோணமலை மறை மாவட்ட இயேசுசபை குழுவினருடன் இணைந்து கொண்டார் . இதனை தொடர்ந்து திருகோணமலை மட்டக்களப்பு பகுதிகளில் பணியாற்றி பின் இந்தியா சென்று புனே குருமடத்தில் கற்கையினை நிறைவு செய்து 24.03.1954 ஆம் ஆண்டு குருவாக திருநிலப்படுத்தப்பட்டார்.
அருட்தந்தை 1954 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை திருகோணமலைக்கு வருகை தந்து புனித சூசையப்பர் கல்லூரியில் ஆசிரியராகவும் விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளராகவும் விஞ்ஞான பட்டதாரஆசிரியராக கடமையாற்றிய போது புனித சூசையப்பர் கல்லூரி அரசுதான் பொறுப்பேற்க பிற்பாடு 1970 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி இயேசு சபை குடும்பத்தில் இணைந்துகொண்டார் அதன் பின் புனித மிக்கேல் கல்லூரியில் கூடைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராக தனது பணியினை ஆரம்பித்தார் ..
இவ்வாறான நிலையில் 1990 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையான காலப்பகுதியில் வாழைச்சேனை பகுதியில் முற்றுகையிடப்பட்டிருந்த மக்கள் , குருவானவர் , அருட்சகோதரிகள் போன்றோரை பாதுகாப்பான முறையில் வெளியேற்றும் வகையில் விரைந்து செயற்பட்டு தனது பணியினை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்களில் 15.08.1990 வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்துக்கொண்டு இருந்த போது ஏறாவூர் பகுதியில் வைத்து அருட்தந்தை காணாமல் ஆக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது-