ராஜபக்ச, சஜித் அணிகளுடன் கூட்டணிக்கு இடமில்லை! ஜே.வி.பி. அறிவிப்பு.

“பிரதான கட்சிகள் எனக் கூறிக்கொள்ளும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கமாட்டோம்” என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாக அறிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“ஆட்சியைப் பிடித்து பதவிகளைப் பங்கிடுவதற்காகவே கடந்த காலங்களில் கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது சம்பிரதாய நடவடிக்கையாகவும் மாறியுள்ளது. இந்தக் கூட்டணி கோட்பாடு எமக்குப் பொருந்தாது.
தேசிய மக்கள் சக்தியும் கூட்டமைப்புதான். அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் அங்கம் எமது கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர். எமது கூட்டணிக்கான ஆதரவு பெருகி வருகின்றது.
எனவே, பிரதான கட்சிகள் எனக் கூறிக்கொள்ளும் இரண்டு தரப்புகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாம் கூட்டணி அமைக்கமாட்டோம்” – என்றார்.