இலங்கையில் ‘ஒமிக்ரோன்’ தொற்றாளர்கள்: விசாரணை தீவிரம்.

இலங்கையில் ‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்றியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு விரிவான விசாரணை வேட்டையை ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றிய மூவர் நேற்று அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் இருவர் இலங்கையர்கள்; ஏனைய ஒருவர் வெளிநாட்டவர்.
இந்நிலையிலேயே, அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்களைக் கண்டறியும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
இலங்கையில் இதுவரை 4 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.