விது நம்பிக்கை நிதிய 17வது ஆண்டு விழா, ஞாயிறு 19 , தெல்லிப்பளையில் ….
விது நம்பிக்கை நிதியத்தின் 17 ஆண்டு நிறைவையொட்டி இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் கல்விசார் உதவி திட்டங்கள் பல மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் நிமித்தம் எதிர்வரும் 19.12.2021 , தெல்லிப்பளை Sanders மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் விழாவில் சைகை மொழி காணோளி வெளியீட்டு நிகழ்வும் இடம் பெற உள்ளது.
மாற்றுதிறனாளிகளில் செவிப்புல வலுவற்றோரின் தொடர்பாடல் மொழியான சைகை மொழியில், அடிப்படை சைகைகள் அடங்கிய இலங்கை அரச கரும மொழிகளான சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் பயன்பாட்டிலுள்ள சிங்கள சைகை, தமிழ் சைகை இரண்டினையும் ஒருமித்து உள்ளடக்கியதான “சைகை மொழி” காணொளி வெளியீடானது நாகேந்திரம் விஜிதாவின் தலைமையில் விருந்தினர்களான பேராசிரியர் சிறிசற்குணராஜா, வைத்தியகலாநிதி கேதீஸ்வரன், மரியாதைக்குரிய வள்ளிகாந்தன் மற்றும் செவிப்புல வலுவிழந்த சமூகத்தினர், விசேட கல்வி ஆசிரியர்கள் முன்னிலையில் விது நம்பிக்கை நிதிய குழுமத்தினரால் வெளீயீடு செய்யப்படவுள்ளது .