டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு.
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் வரிசையில் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிமுதல் இவ் செயற்திட்டம் ஆரம்பிக்கபடவுள்ளது!
இது தொடர்பில் இளவாலை கிராம மக்களுக்கு நகரும் ஒலிபெருக்கி வாயிலாக அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளது!
கிராமத்தவர்கள் தங்கள் வீடுகள்தோறும் உள்ள டெங்கு நுளம்பு பெருக ஏதுவான பொருட்களான இளநீர் கோம்பைகள், பழைய பிளாஸ்திக் பொருட்கள், பழைய டயர்கள், சிரட்டைகள் முதலான நீர் தேங்க்கூடிய பொருட்களை சேகரித்து வீடுகள் தோறும் பொதி செய்து வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறனர்!
சங்க உறுப்பினர்கள் ஞாயிற்றுகிழமை (19-12-2021) வலிவடக்கு பிரதேச சபையின் விசேட வாகனம் ஊடாக வீடுகள் தோறும் சென்று அப்பொதிகளை சேகரித்து உரிய முறையில் அப்புறப்படுத்த வலிவடக்கு பிரதேச சபையிடம் ஒப்படைக்கவுள்ளார்கள்!