எம்.பி பதவியை இராஜினாமா செய்கின்றாரா சம்பந்தன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளாரென தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவர், மருத்துவர்களின் ஆலோசனையின் பிரகாரமே இந்த முடிவை எடுக்கக்கூடுமெனவும் கூறப்படுகின்றது.
எனினும், இது தொடர்பில் அதிகாரபூர்வமாக இன்னும் எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இந்த விடயம் பரிசீலனை மட்டத்தில் இருப்பதாகவே சொல்லப்படுகின்றது.