தமிழக அரசின் அழைப்பை ஏற்று தமிழகம் வரும் பிரதமர் மோடி
ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதியதாக கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். அவருடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாயாவும் வர உள்ளார்.
மாவட்டத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் தமிழகத்தில் சுமார் 3575 கோடி மதிப்பீட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் பணியை மத்திய அரசின் ஒப்புதல் பெற்று தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக கூடுதல் மருத்துவ இடங்களும் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய மருத்துவ கல்லூரிகளை திறப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் தமிழக சுகாதாரத்துறை நேரம் கேட்டிருந்த நிலையில், அதற்காக ஜனவரி மாதம் 12 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார்.