புதையல் தோண்டிய 9 பேர் சிக்கினர்!

கண்டி, உடதும்புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தேகம பிரதேசத்தில், புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 9 பேரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தியப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
உடதும்பர, நாவுல்ல, பன்வில, திகண, உருவெல மற்றும் ஹசலக்க ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 முதல் 48 வரையான வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கந்தேகம பிரதேசத்திலுள்ள விகாரையொன்றுக்குச் சொந்தமான இடத்தில் புதையல் தோண்டும் செயற்பாட்டில் சந்தேகநபர்கள் ஈடுபட்டபோதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.