நிவாரணப் பொதியை அறிவிப்பதற்கு முன்னர், திருகோணமலை எண்ணெய் தொட்டிகளைக் கோருகிறது இந்தியா …
எதிர்வரும் ஜனவரி மாதம் இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள உத்தேச நிதி உதவிப் பொதியை அறிவிப்பதற்கு முன்னர், திருகோணமலை எண்ணெய் தாங்கி திட்டம் தொடர்பான உத்தேச கூட்டு வேலைத்திட்டம் தொடர்பில் இலங்கை உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாங்கிகளில் இந்திய எண்ணெயை சேமித்து வைத்து அதன் தேவைக்கேற்ப இலங்கைக்கு எண்ணெய் வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முறைமை ஏற்றுக்கொள்ளப்பட்டால் இலங்கை தற்போதுள்ள விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என நம்பப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்திய அரசாங்கமும் இலங்கையின் நிதியமைச்சகமும் அடுத்த ஜனவரியில் சுமார் 1900 மில்லியன் அமெரிக்க டொலர் பொதிக்கு உடன்பட்டுள்ளன.
உணவு மற்றும் மருந்துகளை வாங்க 1,000 மில்லியன் டாலர்களும், எரிபொருள் வாங்க 500 மில்லியன் டாலர்களும், வெளிநாட்டு இருப்புக்களை அதிகரிக்க 400 மில்லியன் டாலர்களும் இதில் அடங்கும்.