நெதர்லாந்தில் ஊரடங்கு உத்தரவை அந்நாட்டின் பிரதமர் அறிவித்தார்.

நெதர்லாந்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
தற்போது நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் நாம் நினைத்ததை விட வேகமாக பரவி வருகிறது. எனவே நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதாவது இன்று முதல் ஜனவரி 14 வரை அனைத்து அத்தியாவசியமற்ற கடைகள், உணவகங்கள், பார்கள், சினிமாக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட வேண்டும். அதே நேரத்தில் பள்ளிகள் குறைந்தது ஜனவரி 9 வரை மூடப்பட வேண்டும்.
கிறிஸ்துமஸ் தினத்தைத் தவிர, மற்ற நாட்களில் மக்கள் தங்கள் வீட்டில் அனுமதிக்கப்படும் விருந்தினர்களின் எண்ணிக்கையும் நான்கில் இருந்து இரண்டாக குறைக்கப்படுகிறது. இவ்வாறு மார்க் ரூட்டே தெரிவித்தார்.