பிரான்சில் 2022 தொடக்கத்தில் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கக்கூடும்.
தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் குறித்து பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறுகையில், தற்போது பரவி வரும் ஒமைக்ரான் உலக நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசானது 2022 தொடக்கத்தின் போது பிரான்சில் தீவிரமாக பரவக்கூடியதாக இருக்கும்.
ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் மக்கள் நோய்த்தொற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ள முடியும். ஒமைக்ரான் வேகமாக பரவுகிறதே தவிர அதன் வீரியம் குறைவாகவே உள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் கால வரம்பு, இரண்டாவது தடுப்பூசி தேதியிலிருந்து ஐந்து மாதங்கள் இருந்த நிலையில், இது தற்போது நான்கு மாதங்களாக குறைக்கப்படுவதாக காஸ்டெக்ஸ் கூறினார்.