கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு சுற்றுலா சென்ற பேருந்து விபத்து.

கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு சுற்றுலா சென்ற பேருந்து இன்று (19) அதிகாலை பதியத்தலாவை பகுதியில் வீதியை விட்டு விலகி மோதிய விபத்தில் 17 படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் பேருந்து ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு நேற்று சனிக்கிழமை இரவு கதிர்காமத்தை நோக்கி பேருந்து பயணித்தது. இதன்போது இன்று அதிகாலை பதியத்தலாவை கல்லோடை பாலத்துக்கு அருகில் சாரதிக்கு நித்திரை தூக்கத்தை அடுத்து பேருந்து வீதியை விட்டு விலகி மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 17 பேர் படுகாயமடைந்த நிலையில் மகாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதியத்தலாவை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.