டொலரில் பணம் செலுத்தப்படாவிட்டால் விமான எரிபொருளை வழங்கமாட்டோம்.
டொலரில் பணம் செலுத்தாவிடின் எரிபொருள் வழங்கப்படாது- ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எரிசக்தி அமைச்சு அறிவிப்பு.
டொலரில் பணம் செலுத்தப்படாவிட்டால் விமான எரிபொருளை வழங்கமாட்டோம் என எரிசக்தி அமைச்சு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனை எரிசக்தி அமைச்சின் செயலாளர் K. D. R. Olga, உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளதுடன், அரச வங்கி வலையமைப்பின் ஊடாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) டொலரை செலுத்துமாறு ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்கு அறிவித்துள்ளார். என Sunday times க்கு தெரிவித்துள்ளார்
“ஜெட் எரிபொருளை வழங்க வேண்டும் என்றால், எங்களுக்கு டொலர்கள் தேவை. இதுகுறித்து விமான நிறுவனத்திடம் சில காலமாக கூறி வருகிறோம். ஆனால் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தோம். விமான நிறுவனம் டொலர்களை சம்பாதிக்கிறது. எனவே, நாங்கள் இறக்குமதி கப்பல்களை விடுவிக்க வேண்டுமானால், அரச வங்கி அமைப்புக்கு டொலர்களை அனுப்ப வேண்டும் என்று நிறுவனத்திற்கு தெரிவித்தோம், என்று அவர் கூறினார்.
விமான சேவை மற்றும் இலங்கை மின்சார சபை (CEB) போன்ற பல அரச நிறுவனங்களும் கடனுக்காக எரிபொருளை கொள்வனவு செய்வதாகவும் இதன் விளைவாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிதிச்சுமை அதிகரித்து வருவதாகவும் செயலாளர் கூறினார்.
வாரத்தின் தொடக்கத்தில், 40,000 மெட்ரிக் தொன் ஜெட் எரிபொருளை ஏற்றிச் செல்லும் கப்பல் நாட்டிற்கு வந்துள்ளது மற்றும் ஜனவரி 20 ஆம் திகதி வரை மட்டுமே தேவையை பூர்த்தி செய்ய கையிருப்பு போதுமானது என்று சிலோன் பெற்றோலியம் சேமிப்பு முனைய லிமிடெட் (CPSTL) இன் உயர் அதிகாரி தெரிவித்தார்.
இதற்கிடையில், நாட்டில் சுத்திகரிப்புக்கான கச்சா எண்ணெய் தீர்ந்துவிடும் என்பதால், சபுகஸ்கந்த சுத்திகரிப்பு ஆலை மீண்டும் ஜனவரி 3 முதல் மூடப்படும் என்று CPSTL வட்டாரங்கள் தெரிவித்தன. ஆலை அதன் வரலாற்றில் முதல் முறையாக நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரை மூடப்பட்டது. கச்சா இருப்பு இல்லாததால்.
இதைப் பற்றி திருமதி ஓல்காவிடம் கேட்டபோது, ஜனவரி 25 க்குப் பிறகு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றும் அதுவரை, அவர்கள் சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.