இந்தியாவின் நிவாரணப் பொதி குறித்து சஜித்திடம் இருந்து வந்த எதிர்பாராத பதில்

இந்தியாவின் நிவாரணப் பொதி மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப  , இந்தியா கடுமையான சில நிபந்தனைகளுடன் பணத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

இலங்கை ஜனவரி 18ஆம் திகதி 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளமையே இதற்குக் காரணம்.

அடுத்த ஆண்டில் அரசாங்கம் கிட்டத்தட்ட 7 பில்லியன் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.

பசிலின் இந்திய விஜயத்தின் போது இந்தியத் தரப்பில் சிவப்பு விளக்கு காட்டப்பட்ட போதும், அந்நாட்டிடம் கடன் பெறும் முயற்சியை அரசாங்கம் கைவிடவில்லை. அதன்படி, திரைமறைவில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தன.

அதன்படி, இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும், புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கும் இடையில் இந்த கடன் தொடர்பில் திரைமறைவில் செய்திகள் பரிமாறப்பட்ட நிலையில், மற்றுமொரு விசேட நபரிடம் இலங்கைக்கு கடனுதவி வழங்கப்படுவது தொடர்பில் ஆராய இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது போன்ற ஒரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை என்பதுதான் அந்த சிறப்பு நிகழ்வு. இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறிமதாசவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தக் கடன் தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அரசாங்கம் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்களை  இந்தியா சஜித்திடம் கேட்டுள்ளது.

இந்தியாவுக்கும் சஜித்திடம் இருந்து எதிர்பாராத பதில்!

கடந்த காலங்களில் எதிர்கட்சித் தலைவர்களுக்கு இப்படி ஒரு செய்தி வந்தவுடன் பொதுவாக நடப்பது போல , சஜித் , அவர்களின் நடவடிக்கையை சீர்குலைக்கும் அளவுக்குச் செல்லவில்லை. அதன்படி இந்தியா சற்றும் எதிர்பாராத பதிலை சஜித் கொடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் அரசாங்கம் பொருளாதாரத்தை நடத்திய விதம் முற்றிலும் தவறாக இருந்த போதிலும், அரசாங்கத்தின் தவறுகளுக்காக நாட்டு மக்கள் தண்டிக்கப்படக் கூடாது என சஜித் அப்போது தெரிவித்துள்ளார். மக்கள் தற்போது பெரும் துயரத்திலும் நெருக்கடியிலும் உள்ளதை இந்தியாவிடம் சுட்டிக்காட்டிய சஜித், மக்களின் மனக்குறைகள் மற்றும் வேதனைகள் ஊடாக ஆட்சிக்கு வர தாம் தயாரில்லை என்றும் நாட்டுக்கு இந்தருணத்தில் உதவுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன்பின், நாட்டின் ஜனநாயக சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் மக்களின் உரிமைகள் தொடர்பில் இந்தியாவுக்கும் சஜித்துக்கும் இடையில் நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எனவே இந்த சம்பவத்தின் மூலம் ஒரு விஷயம் தெளிவாகிறது. அதாவது முன்னர்  கேட்ட போதெல்லாம் வழங்கியது போல , இனிவரும் காலங்களில்  இந்தியா , இலங்கைக்கு உதவ தயாரில்லை என்பதாகும். எந்த உதவியையும் கடும் நிபந்தனைகளுடன்தான் வழங்கும்.

 

Leave A Reply

Your email address will not be published.