4 நாடுகளின் அமைச்சா்களுடன் தனித்தனியாக ஜெய்சங்கா் ஆலோசனை
இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கஜகஸ்தான், கிா்கிஸ் குடியரசு, துா்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களை ஞாயிற்றுக்கிழமை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
இந்தச் சந்திப்புகளில் அந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே பாதுகாப்பு, எரிசக்தி, கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தினாா்.
முன்னதாக தஜிகிஸ்தான் வெளியுறவு அமைச்சரை ஜெய்சங்கா் சனிக்கிழமை சந்தித்திருந்தாா்.