ஏழு கோரிக்கைகள் சார்பாக மருத்துவர்கள் நாளை (21) முதல் பணிப்புறக்கணிப்பில் ….

நாளை (21) முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏழு கோரிக்கைகளை முன்வைத்து நாளை காலை 8.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், கோவிட் சிகிச்சை மற்றும் அவசர சேவைகள் தடையின்றி தொடரும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.