மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு.
க. பொ. த உயர் தரப் பரீட்சைக்க்கு பெரு எண்ணிக்கையிலான மாணவர்கள் தோற்றினாலும் ஒரு குறிப்பிட்ட தொகையினர்களுக்கே பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. இம்மாணவர்கள் தானாகவே கல்வித் துறையில் உயர் இலட்சியத்தை அடைந்து கொள்வார்கள்.
அரச பல்கலைக்கழகங்களில் தங்களால் சமாளிக்கக் கூடிய ஒரு குறிப்பிட்ட தொகையின் அடிப்படையிலேயே மாணவர்களை உள்வாங்குகின்றார்கள். ஆனாலும் பல்கலைக்கழகள் நுழைவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்காமல் எத்தனையோ எண்ணிலடங்காத பெரு எண்ணிக்கையிலான மாணவர்கள் வெளியே இருக்கின்றனர். இம்மாணவர்களுக்கு பல்கலைக்கக வாய்ப்புக்கள் கிடைக்கா விட்டாலும் கல்வி என்ற உயர் இலட்சியத்தை அடைந்து கொள்ள கூடிய நிறைய வாய்ப்புக்கள் திறந்து உள்ளதாக என்று இலங்கை மாலைதீவுக்கான பெரன்லிங்கவரி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமீர் அஹமட் தெரிவித்தார்.
வட்டதெனிய முகைதீன் ஜும் ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இம்முறை பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர் மாணவிகளையும் மற்றும் க. பொ. த சாதாரண தரத்தில் சகல பாடங்களிலும் 9 ஏ சித்திகள் அடைந்த மாணவர் மாணவிகளையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வட்டதெனிய கிரீன் வி கல்யாண மண்டபத்தில் பள்ளிவாசலின் நிர்வாக சபையின் தலைவரும் பிரபல சமூகச் செயற்பாட்டாளருமான கியாஸ் ரவூப் ஹாஜியார் தலைமையில் இ;டம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை மாலைதீவுக்கான பெரன்லிங்கவரி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமீர் அஹமட் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்
நான் கூட க. பொ. த உயர் தரம் பரீட்சையில் தோல்வியடைந்தவன் தான். ஆனாலும் வெளிவாரி பல்கலைக்கத்தில் கற்று மீண்டெழுந்து வந்து கொழும்பு பல்கலைகத்தில் வர்த்தக முகாமைத்துவ துறையில் முதுமாணி கற்யை நெறியினை மேற்கொண்டவன்தான் நான். இன்று உங்கள் முன் ஒரு பிரதம அதிதியாக அழைக்க்கப்பட்டு உரையாற்றுகின்றேன். அந்த வகையில் யாரும் தங்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்க வில்லையென படிப்பை இடைநடுவில் விட்டுச் செல்லத் தேவையில்லை. அதே போன்றுதான் க. பொ. த சாதாரண தரத்தல் சித்தியடைவில்லை என்றால் படிப்பை விட்டு வெளியே செல்லத் தேவையில்லை. தொழில் நுட்ப ரீதியில் கற்கை நெறிகள் நிறைய உள்ளன. என். வி. கிவ் என்ற அடிப்படையில் தொழில் கல்வி நிலையங்களில் நிறைய பாடங்கள் இருக்கின்றன. அதன் மூலம் எமது உயர் இலட்சியத்தை அடைந்து கொள்ள முடியும்.
எனவே பள்ளிவாசலின் தலைமையின் கீழ் கட்டார் வட்டதெனிய சமூக நல அமைப்பும், வட்டதெனிய கல்வி அபிவிருத்தி சங்கம் ஆகியன ஒன்றிணைந்து ஆற்றி வரும் பணி போற்றத் தக்கதாகும். இப்பிரதேசத்தில் இப்பணி மென்மேலும் தொடர வேண்டும். நான் இப்படியான நிகழ்வுகளுக்கு பல இடங்களுக்கு சென்றுள்ளேன். இது மாதரியான ஒரு நிகழ்வு தான் பிறந்த ஊரிலும் இடம்பெறாதா என்று மனதிற்குள் அங்கலாய்த்துக் கொள்வேன். இன்று முதல் தடவையாக அவ்வாறான நிகழ்வில் தன்னுடைய ஊரிலும் கலந்து கொள்ளக் கிடைத்தமையிட்டு நான் இரட்டிப்பு மகழ்ச்சியடைகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.