பாலியல் குற்றச்சாட்டில் யாஷிர் ஷா மீது வழக்குப்பதிவு.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 35 வயது சுழறபந்துவீச்சாளார் யாஷிர் ஷா இந்நிலையில் இவர் மீது சிறுமி ஒருவர் அளித்த புகாரின் பேரில் இஸ்லாமாபாத் காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன்படி 14 வயது சிறுமி ஒருவர், யாஷிர் ஷாவின் நண்பர் ஃபர்ஹான் என்பவர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதற்கு உடந்தையாக இருந்த யாஷிர் ஷா, இதுதொடர்பாக புகார் அளித்தால், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தன்னை மிரட்டியதாகவும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், இஸ்லாமாபாத்தின் ஷாலிமர் காவல்நிலையத்தில் யாஷிர் ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள அந்த சிறுமி, “இதுதொடர்பாக யாஷிர் ஷாவை நான் வாட்ஸ் அப்பில் தொடர்புகொண்டு கூறியபோது, என்னை பார்த்து சிரித்தது மட்டுமல்லாது, அவருக்கு சிறுமிகளைத்தான் மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார். மேலும் தனக்கு பெரிய பெரிய ஆட்களை எல்லாம் தெரியும் என்றும் மிரட்டினார். யாஷிர் ஷா மற்றும் அவரது நண்பர் ஃபர்ஹான் ஆகிய இருவரும் நிறைய சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவும் எடுத்து வைத்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
சுழற்பந்து வீச்சாளரான யாஷிர் ஷா பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 235 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவிச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இவர் அண்மையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.