அடடே என்ன ஒரு கண்டுபிடிப்பு சிக்கலில் சிக்கிய “பா.ரஞ்சித்”
தஞ்சையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற ரஞ்சித் ராஜராஜசோழன் ஆட்சி செய்த இடங்கள் என்னுடைய பாட்டன் உடையது என பேசி கடும் சிக்கலில் சிக்கினார், அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்ப நீதிமன்ற படிஏறி ஒருவழியாக மன்னிப்பு எனும் அஸ்திரத்தை வேறு வடிவில் வீசி வெளியே வந்தார் ரஞ்சித், இந்த சூழலில் இந்துமதம் சார்ந்து ஏதேனும் ஒரு வகையில் சர்ச்சைகளை உண்டாக்கி வரும் ரஞ்சித் அடுத்து கைவைத்து இருக்கும் இடம் மார்கழி இசை.
மார்கழி மாதத்தில் பல்வேறு கோவில்கள், இசை சபை ஆகியவற்றில் மங்கள இசை நடைபெறுவது வழக்கம் தமிழ் மாதமான மார்கழி இந்துக்களுக்கு புனித மாதமாக பார்க்க படுவதால் மங்கள இசை வாத்தியங்கள் மூலம் பாடல் கச்சேரிகளை நிகழ்த்தி கொண்டாடி வருகின்றனர் பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் இந்த சூழலில் இதே மார்கழி மாதத்தை டார்கெட் செய்து ரஞ்சத் மங்கள இசை என்பதற்கு போட்டியாக மக்கள் இசை ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
மேலும் இந்த மாதத்த்தில் ஒப்பாரி பாடல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் இந்த அறிய கண்டுபிடிப்பு குறித்து ரஞ்சித் பேசியதாவது, மார்கழி மாதத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது, மங்கள இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் வேறுபாடில்லை இரண்டும் மண்சார்ந்தது தான். மார்கழியில் மக்களிசை என்ற தலைப்பில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட தாரை தப்பட்டை, மேளம் மற்றும் கரகாட்டம், ஒப்பாரி, பாடகர்கள் கலந்துகொண்டு மேடையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது நாட்டுப்புற இசைக்கலையை மக்களுக்கானதாக மாற்றுவதற்கான முயற்சியாக இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளோம். மக்களுக்கான இசையை மக்களிடத்தில் கொண்டு செல்கிறோம். மார்கழி என்பது தமிழ் மாதம் இதனை யாரும் உரிமை கொண்டாட முடியாது, மங்கள இசையும் நாட்டுப்புற இசையும் நம் மண் சார்ந்தது தான்.நாட்டுப்புற இசைகளை மேடை ஏற்ற அரசு தரப்பு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம், மக்களிடம் கலையை ஜனநாயக படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துகிறோம் என குறிப்பிட்டார்.
தொடர்ச்சியாக இந்து மதம் சார்ந்த விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் ரஞ்சித் இப்போது மங்கள இசைக்கு போட்டியாக மார்கழி மாதத்தில் ஒப்பாரி இசையை அறிமுக படுத்தி இருக்கும் அறிய கண்டுபிடிப்பை பார்த்து வியப்பில் ஆழ்ந்துள்ளனர் மங்கள இசை பிரியர்கள். இந்த சூழலில் ஏற்கனவே ராஜாராஜசோழன் சர்ச்சையில் சிக்கிய ரஞ்சித் இப்போது ஒப்பாரி இசை சர்ச்சையிலும் சிக்கி சிதைந்து வரும் சம்பவம் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது.