மேலும் 842,400 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு…..
இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 842,400 பைஸர் தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று காலை குறித்த தடுப்பூசி தொகை எடுத்து வரப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொற்தமான விமானம் மூலம் குறித்த தடுப்பூசி தொகை எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தடுப்பூசி தொகை கொழும்பிலுள்ள மத்திய களஞ்சிய வளாகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.