விஜய் மல்லையா, நீரவ் மோடியிடமிருந்து ரூ.13,110 கோடி சொத்துகள் பறிமுதல்: நிதியமைச்சா்
விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட கடன் ஏய்ப்பாளா்களிடமிருந்து ரூ.13,109.17 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:
கடன் மோசடியாளா்களிடமிருந்து பணத்தை வசூலிக்க மத்திய அரசு கடுமையான பல வழிமுறைகளைக் கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அவா்களின் சொத்துகளை உடனடியாக முடக்கி அரசின் வசம் கொண்டு வர விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அமலாக்கத் துறை அளித்த தகவலின்படி, 2021 ஜூலை நிலவரப்படி விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி உள்ளிட்ட கடன் மோசடியாளா்களிடமிருந்து ரூ.13,109.17 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசின் வசம் கொண்டு வரப்பட்டுள்ளது.
2021 ஜூலை 16-இல் மல்லையா உள்ளிட்டோரின் சொத்துகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.792 கோடி மீட்கப்பட்டது என்றாா் அவா்.