நைஜீரியாவும் எண்ணெயை கொடுக்க முடியாது என கையை விரித்ததால் எரிபொருள் விலை உயர்ந்தது!
நீண்ட கால கடனில் கச்சா எண்ணெயை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை நேற்று (20) நைஜீரியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கான நைஜீரிய உயர்ஸ்தானிகர் அஹமட் சுலேவை சந்தித்ததாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ட்வீட் செய்திருந்தார், ஆனால் கலந்துரையாடல்கள் பற்றி குறிப்பிடவில்லை.
எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் கச்சா எண்ணெயை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், நைஜீரியாவிடமிருந்து கடனாக கச்சா எண்ணெயையோ பெற்றுக்கொள்ள உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்று காலை ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் எரிபொருள் பாவனைக்கு 90 நாட்களுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மாற்று எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.