பிரதமர் தலைமையில் கால்டன் முன்பள்ளி மாணவர்களின் கரோல் இசை நிகழ்ச்சி….

கால்டன் முன்பள்ளி குழுமத்தின் தென் மாகாண கிளை இணைந்து ஏற்பாடு செய்த வருடாந்த ‘நத்தார் கரோல் கீதம் 2021’ கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் இன்று (21) தங்காலை கால்டன் முன்பள்ளியில் நடைபெற்றது.
கால்டன் முன்பள்ளி குழுமத்திற்கு சொந்தமான பெலிஅத்த, வீரகெடிய, ரன்ன, வலஸ்முல்ல, மாத்தறை மற்றும் தங்காலை முன்பள்ளிகளின் மாணவ மாணவியர் மிகவும் இனிமையாக கரோல் கீதம் இசைத்தனர்.
தமது திறமைகளை மிகவும் அழகாக வெளிப்படுத்திய கால்டன் முன்பள்ளி மாணவர்களை கௌரவ பிரதமர் பாராட்டினார்.
கரோல் இசை நிகழ்வை வர்ணமயமாக்கிய அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் கால்டன் முன்பள்ளியின் அதிபரும் பணிப்பாளருமான பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்களினால் பரிசுப் பொருட்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் கௌரவ இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக, தென் மாகாண சபையின் தவிசாளர் சோமவங்ஷ கோதாகொட, இலங்கை உப்பு நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி நிசாந்த சந்தபரண உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.