பஸ் கட்டணம் 20% உயர்வு.. குறைந்தபட்ச கட்டணம் 25 ரூபா

டீசலின் விலையை அதிகரிப்பால் , பஸ் கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக பஸ் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
குறைந்த பட்ச பஸ் கட்டணத்தை 25 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணத்தை அதிக சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்துச் சேவை வீழ்ச்சியடைந்துள்ளமையினால் மக்கள் தனியார் வாகனங்களில் பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.