புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறை!
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுடைய 2021ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த ஸ்மார்ட் வகுப்பறையினை மாணவர்களிடம் கையளித்தார்.
இந் நிகழ்வில் பாடசாலை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.