தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பில் தெளிவூட்டும் செயலமர்வு.
அரச அதிகாரிகள் மற்றும் சமூக பிரதிநிதிகளுக்கான தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான தெளிவூட்டல் மன்னார் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
தகவலறியும் உரிமை, தகவல்களை எவ்வாறு வழங்க வேண்டும் போன்றவை தொடர்பில் இச்செயலமர்வில் விளக்கமளிக்கப்பட்டது.
தகவல் அறியும் சட்டத்தின் புதிய ஆணையாளர் ஜகத் லியன ஆராச்சி, மன்னார் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.குணபாலன், பிரதேச செயலாளர்கள், தகவல் அறியும் சட்டத்தின் சிரேஷ்ட ஆய்வு அதிகாரி, ஆய்வு அதிகாரி, சட்ட அதிகாரி, மாவட்ட செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் செயலமர்வில் கலந்துகொண்டிருந்தனர்.